தேமுதிக வேட்பாளர் சாமி தரிசனம்

தேமுதிக வேட்பாளர் சாமி தரிசனம்
சிவகாசி அருகே திருத்தங்கல்லில் தேமுதிக வேட்பாளருடன்,முன்னாள் அமைச்சர் கே.டி.இராஜேந்திர பாலாஜி சாமி தரிசனம்..
சிவகாசி அருகே திருத்தங்கல்லில் தேமுதிக வேட்பாளருடன் முன்னாள் அமைச்சர் கே.டி.இராஜேந்திர பாலாஜி சாமி தரிசனம் செய்தார்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் ஸ்ரீமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழாவின் 1 ஆம் திருவிழாஅம்மன் சிம்ம வாகனத்தில் வீதி உலாவில் மேற்கு மாவட்ட கழக செயலாளரும்,முன்னாள் அமைச்சரும்,தேர்தல் பொருப்பாளருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி மற்றும் தேமுதிக வேட்பாளர் விஜய்பிரபாகரன் மற்றும் கட்சி தொண்டர்களுடன் தேர்தல் பரப்புரை முடித்துவிட்டு திரும்பு வழியில் அம்மன் வீதி உலா நடைப்பெற்றதால் தனது காரிலிருந்து இறங்கி அம்மனை தரிசனம் செய்தனர்.கோவில் நிர்வாகம் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தனர்.இந்நிகழ்ச்சியில் அதிமுக, தேமுதிக மற்றும் தோழமை கட்சி தொண்டர்கள் கலந்து கொண்ட அனைவரும் அம்மனை தரிசனம் செய்தனர்.

Tags

Next Story