சேலத்தில் தேமுதிக கொடி நாள் கொடியேற்றம்

சேலத்தில் தேமுதிக கொடி நாள் கொடியேற்றம்

அன்னதானம் 

சேலத்தில் நடைபெற்ற தேமுதிக கொடி நாள் விழா மற்றும் விஜயகாந்த் 47வது நினைவேந்தல் நிகழ்வில் திரளான தேமுதிகவினர் கலந்து கொண்டனர்.
சேலம் அம்மாபேட்டை மிலிட்டரி ரோடு பகுதியில் தேமுதிக கட்சியின் கொடி நாளை முன்னிட்டு கொடியேற்றும் நிகழ்ச்சி மற்றும் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் 47 வது நாள் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. அம்மாபேட்டை பகுதி செயலாளர் பாக்கு செல்வகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கழக கொள்கை பரப்பு செயலாளர் அழகாபுரம் மோகன்ராஜ் மற்றும் மாநகர் மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கழகக் கொடியினை ஏற்றி வைத்தனர். தொடர்ந்து தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் 47 வது நாள் நினைவேந்தலை முன்னிட்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மேற்கு மாவட்ட செயலாளர் சுரேஷ் பாபு அவை தலைவர் செல்வகுமார் மாவட்டத் துணைச் செயலாளர் சீனிவாசன் கேப்டன் என்ற செயலாளர் பன்னீர்செல்வம் செயற்குழு உறுப்பினர் செல்வராஜ் பொதுக்குழு உறுப்பினர் எஸ் நாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story