விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு தே.மு.தி.க.வினர் பாதயாத்திரை
விஜயகாந்த் நலம் பெற்று வீடு திரும்பியதால் நேர்த்தி கடன் மேற்கொண்டனர்
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல்நலம் பெற்று வீடு திரும்பியதை தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட செயலாளர் எல்.வெங்கடேசன் அறிவுறுத்தலின்பேரில் விழுப்புரம் நகர தே.மு.தி.க. சார்பில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு பாதயாத்திரை செல்லும் நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் விழுப்புரம் ரெயில் நிலையம் அருகில் இருந்து நகர செயலாளர் மணிகண்டன் தலைமையில் மாவட்ட துணை செயலாளர் சூடாமணி, மாவட்ட மகளிர் அணி துணை செயலாளர் இந்திரா, நகர துணை செயலாளர்கள் சீத்தாபதி, வேம்பு மயிலப்பன், மாவட்ட நிர்வாகிகள் விஜயராகவன், வெங்கடேசன், விக்கிரவாண்டி ஒன்றிய பொருளாளர் சிவனேசன், நிர்வாகிகள் கணேசன், சுந்தர், குமார், சாதிக்பாஷா, தமிழ், பாக்யராஜா, சத்தியசீலன், சண்முகம், நடராஜன், முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் திருவண்ணாமலை கோவிலுக்கு பாதயாத்திரையாக புறப்பட்டனர்.
Next Story