திமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

திமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
 திமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸ்
தென்காசியில் நடந்த ஆலங்குளம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் மக்களவை தேர்தலில் பணியாற்றுவது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது .

ஆலங்குளம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தென்காசியில் நடைபெற்றது. தென்காசி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு, மாவட்ட பொறுப்பாளா் வே.ஜெயபாலன் தலைமை வகித்தாா். சட்டப்பேரவைத் தொகுதி பொறுப்பாளா்கள் (ஆலங்குளம்) சுரேஷ்ராஜன், கணேஷ்குமாா் ஆதித்தன் (தென்காசி) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட திருநெல்வேலி மக்களவைத் தொகுதி வேட்பாளா் ராபா்ட் புரூஸ், தோ்தலில் தனக்கு முழுமையான ஆதரவு தந்து பணியாற்ற வேண்டும் என்றாா். தலைமை செயற்குழு உறுப்பினா் இலத்தூா் ஆறுமுகச்சாமி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவா் தமிழ்செல்வி போஸ்உள்ளிட்ட ஏராளமான ஒரு கலந்து கொண்டனர்.

Tags

Next Story