வாக்கு எண்ணும் பணி: திமுக முகவர்கள் ஆலோசனை

வாக்கு எண்ணும் பணி: திமுக முகவர்கள் ஆலோசனை
வாக்குசாவடி முகவர்கள்
புதுக்கோட்டை திமுக முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது.
வாக்கு எண்ணும் பணிக்குச் செல்லும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த திமுக முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, வடக்கு மாவட்ட திமுக செயலர் கே.கே. செல்லப்பாண்டியன் தலைமை வகித்தார். சென்னையிலிருந்து திமுக தலைமை மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட, காணொலிக் காட்சி இந்த அரங்கில் நேரடியாகத் திரையிடப்பட்டது. திமுக அமைப்புச் செயலர் ஆர்.எஸ். பாரதி உள்ளிட்ட வழக்குரைஞர்கள் பேசினர். தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்டச் செயலர் கே.கே. செல்லப்பாண்டியன் மாவட்ட முகவர்களுடன் பேசினார். மதிமுக மாவட்டச் செயலர் கலியமூர்த்தி உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

Tags

Next Story