திமுக முகவர்கள் ஆலோசனை கூட்டம்

கோவையில் நாடாளுமன்ற திமுக முகவர்கள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது.

நாட்டின் 18வது மக்களவைத் தேர்தலுக்கான அட்டவணையை மார்ச் 16ம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.2024ஆம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி துவங்கி இந்தியாவில் 7 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டு வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

முதற்கட்டத் தேர்தல் 21 மாநிலங்களில் ஏப்ரல் 19ஆம் தேதியும், இரண்டாம் கட்டத் தேர்தல் 13 மாநிலங்களில் ஏப்ரல் 26ஆம் தேதியும்,மூன்றாம் கட்டத் தேர்தல் 12 மாநிலங்களில் மே 7ஆம் தேதியும்,நான்காம் கட்டத் தேர்தல் 10 மாநிலங்களில் மே 13ஆம் தேதியும்,ஐந்தாம் கட்டத் தேர்தல் 8 மாநிலங்களில் மே 20ஆம் தேதியும்,ஆறாம் கட்டத் தேர்தல் 7 மாநிலங்களில் மே 25ஆம் தேதியும் இறுதி கட்ட தேர்தல் 8 மாநிலங்களில் இன்று நடைபெறுகிறது.ஜூன் 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட உள்ள நிலையில் கோவை நாடாளுமன்ற திமுக முகவர்கள் ஆலோசனைக்கூட்டம் கழக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ்.பாரதி,வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ,டிகேஎஸ்.இளங்கோவன் ஆகியோர் காணொலி வாயிலாக ஆலோசனை வழங்கினர்.இதற்கான நாடாளுமன்ற திமுக முகவர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் கோவை உப்பிலிபாளையத்தில் நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இருந்து கழக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி,கழக சட்டத்துறை செயலாளர் வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ,கழக தலைமை நிலைய செயலாளர் டிகேஎஸ்.இளங்கோவன் ஆகியோர் காணொலி வாயிலாக முகவர்களுக்கு ஆலோசனை வழங்கினர்.

இதில் கோவை மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக், வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story