கொல்லிமலையில் பாரம்பரிய நடனமாடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திமுக கூட்டணி வேட்பாளர்!

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் திமுக கூட்டணியின் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மாதேஸ்வரன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது, செம்மேட்டில் கொல்லிமலையின் மலைவாழ் மக்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து கொல்லிமலையின் பாரம்பரிய கும்மி ஆட்டம் ஆடிய பெண்களுடன் இணைந்து வேட்பாளர் மாதேஸ்வரன் நடனமாடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இதனால் அப்பகுதி மக்களிடம் குறிப்பாக பெண்களிடம் அதிக வாக்குகளை சேகரித்தார். இதனைத் தொடர்ந்து கொல்லிமலையில் உள்ள பல்வேறு பகுதிகளிலும் வாக்குகளை சேகரித்து வருகிறார்.

Tags

Next Story