மத்திய அரசை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசு மற்றும் ஆளுநர்களின் அத்துமீறலை கண்டித்து மார்க்., கம்யூ, திமுக, காங்., உட்பட பல கட்சிகளின் சார்பில் தூத்துக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

மத்திய பாஜக அரசு மாநில உரிமைகளை பறித்து மாநில அரசின் மீது தாக்குதல் நடத்திய வருவதை கண்டித்தும் எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களுக்கு முறையாக நிதி வழங்காததை கண்டித்தும் ஆளுநர்களின் அத்துமீறலை கண்டித்தும் மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகள் மூலம் எதிர்க்கட்சித் தலைவர்களை பழிவாங்கும் நடவடிக்கைகளை கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக, விடுதலை சிறுத்தைகள் தமுமுக காங்கிரஸ் மதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகள் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி சிதம்பரம் நகர் பேருந்து நிறுத்தம் அருகில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஒட்டப்பிடாரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா தூத்துக்குடி மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன், திமுக மாநில பேச்சாளர் சரவெடி சரத் பாலா, சுகாதார குழு தலைவர் சுரேஷ்குமார் துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், காங்கிரஸ் கட்சியின் மாநகர தலைவர் முரளிதரன், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அகுமது இக்பால், மதிமுக நக்கீரன், திமுக மாவட்ட பிரதிநிதிகள் கதிரேசன், தெர்மல் சக்திவேல், மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார் திமுக பகுதி செயலாளர்கள் நிர்மல், ஜெயக்குமார், சிபிஎம் கட்சி மாநகர செயலாளர் முத்து, மாதர் சங்கம் மயில், சங்கரன், புவி ராஜ், முன்னாள் மேயர் கஸ்தூரி தங்கம், மனிதநேய மக்கள் கட்சி தூத்துக்குடி மாநகர பொறுப்பு குழு தலைவர் மெட்ரோ சேக், சுலைமான், பொறுப்புக்குழு உறுப்பினர்கள் சம்சுதீன்,பிரவீன், கிளை செயலாளர் நூர் முகமது, அப்துல்லாஹ் உள்ளிட்ட அனைத்து கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி காங்கிரஸ் மதிமுக தமுமுக விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து மத்திய அரசு தமிழக அரசை மட்டுமின்றி எதிர்க்கட்சிகள் ஆளக்கூடிய மாநிலங்களையும் வஞ்சித்து வருகிறது இதற்கு வருகின்ற தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் எனவும் மத்திய அரசை கண்டிக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளதாக ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா தெரிவித்தார்.

Tags

Next Story