திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

வாக்கு சேகரிப்பு

சேலம் மாவட்டம், சங்ககிரி நகர் பகுதியில் கொமதேகயின் சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு திமுக கூட்டணி கட்சியினர் வீடு வீடாக வாக்குசேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

நாமக்கல் மக்களவை தொகுதியில் திமுக கூட்டணியின் சார்பில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் வி.எஸ்.மாதேஸ்வரன் திமுக சின்னத்தில் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவு கோரி திமுக நகர செயலாளர் கே.எம்.முருகன், சேலம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சி.எஸ்.ஜெய்க்குமார் தலைமையில் நிர்வாகிகள் சங்ககிரி நகர் பகுதியில் உள்ள புதிய, பழைய எடப்பாடி சாலைகள், வாணியர் காலணி, மலையடிவராம், சந்தைபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்குகளை சேகரித்தனர்.

திமுக மாவட்ட மகளிரணி நிர்வாகி நிர்மலா, மார்க்சிஸ்கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி ராஜேந்திரன், மதிமுக கதிர்வேல், தங்கவேல், காங்கிரஸ் டி.எம்.காசிலிங்கம், ரவி, ஜெகநாதன், ஆறுமுகம், திமுக நிர்வாகிகள் பேரூராட்சி துணைத்தலைவர் அருண்பிரபு, முன்னாள் ஒன்றிய செயலாளர் குப்புசாமி உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story