40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி - அமைச்சர் மு.பெ. சாமிநாதன்
திருப்பூர் மாவட்டம் முத்தூர் நகராட்சி அரசு ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் செய்தித்துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன் தன்னுடைய வாக்கை குடும்பத்துடன் வரிசையில் நின்று பதிவு செய்தார், மனைவி உமாதேவி மற்றும் மகள் சம்யுக்தா ஆகியோருடன் தன்னுடைய வாக்கை பதிவு செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் இந்தியா கூட்டணி ஆட்சி அமையப் போறது உறுதி என்றும் தமிழகம் பாண்டிச்சேரியில் நாற்பதற்கு 40 தொகுதிகளையும் திமுக கூட்டணி வெல்வது உறுதி என்றும் தெரிவித்தார்.
இவிஎம் இயந்திரம் தொடர்பான வழக்கை நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது குறித்த கேள்விக்கு தற்போது இவிஎம் மூலம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தேர்தலில் ஏதேனும் பிரச்சனை என்றால் மீண்டும் நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் தெரிவித்தார் தொடர்ந்து இன்றைய தேர்தல் களத்தில் திமுகவினர் மகிழ்ச்சியாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.