பேராசிரியர் அன்பழகன் பிறந்தநாள் விழா
பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் உள்ள பெரம்பலூர் மாவட்ட திமுக கட்சி அலுவலகத்தில், பேராசிரியர் அன்பழகன் 102 - வது பிறந்த நாளை முன்னிட்டு திமுக மாவட்ட செயலாளர் இராஜேந்திரன் தலைமையில் , சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் முன்னிலையில்டிசம்பர் 19ஆம் தேதி அங்கு வைக்கப்பட்ட அவரது திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியின்போது, தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் ராஜேந்திரன், ஒன்றிய கழகச் செயலாளர்கள் ராஜ்குமார், ஜெகதீசன்,மதியழகன், டாக்டர் வல்லபன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஹரிபாஸ்கர், மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் டாக்டர் கருணாநிதி, வேப்பந்தட்டை ஒன்றிய துணை பெருந்தலைவர் ரெங்கராஜ், மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் ரமேஷ், வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் சிவா மற்றும் வழக்கறிஞர் கவியரசன், மதுபாலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.