வன்முறையும் அட்டகாசமும் செய்வதற்கு பிறந்த கட்சி திமுக-அண்ணாமலை!
அண்ணாமலை
திமுக முதன்முதலாக தமிழகத்தில் டெபாசிட் இழக்க கூடிய தொகுதி கோவை மக்களவைத் தொகுதி எனவும்,வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்த மூன்று அல்லது நான்கு சுற்றுக்களிலேயே தெரிந்து விடும் அவர்கள் டெபாசிட் வாங்க மாட்டார்கள் என்று அந்த அளவு வெறுப்பை சம்பாதித்து இருக்கின்றனர் என , தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்வில் பா.ஜ.க வேட்பாளர் அண்ணாமலை தெரிவித்தார்.
கோவை அவினாசி சாலையில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் பணிமனை அலுவலகத்தில் கோவை மக்களவை தொகுதிக்கான தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.அக்கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தேர்தல் அறிக்கையினை வெளியிட,பல்வேறு துறைகளை சேர்ந்த 12 பேரிடம் தேர்தல் அறிக்கை வழங்கப்பட்டது.
இதை வெளிட்டு பேசிய பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை,என் கனவு நமது கோவை என்ற தலைப்பில் 100 வாக்குறுதிகளை 500 நாட்கள் என்று கொடுத்துள்ளோம் எனவும் ,முக்கிய 15 வாக்குறுதிகளை இங்கு சொல்கின்றேன் என அவற்றை பட்டியலிட்டார்.
அதில் கோவை பாராளுமன்ற அலுவலகம் 6 சட்ட தொகுதியிலும் அமைக்கப்படும்,விமான நிலைய விரிவாக்கம்,மெட்ரோ பணிகள் விரைந்து முடிக்கபடும்,கோவையில ஐஐஎம் அமைக்கப்படும், ஆனைமலையாறு நல்லாறு ஆணை கொண்டு வருவோம்,NIA அலுவலகம் கொண்டு வரபடும், NCB அலுவலகம் அமைக்கப்படும், கோவை தொகுதியில் 4 நவயோதயா பள்ளி அமைக்கப்படும் எனவும்,தேசிய விளையாட்டு ஆணையம் பட்டியாலாவின் கிளை கோவையில் அமைக்கப்படும், தொகுதியில் 250 மக்கள் மருந்தகம் தொகுதியில் நிறுவப்படும், 10 புராதண கோவில்களுக்கு செல்ல புதிய ரயில்கள் விடப்படும்,ஸ்மார்ட்சிட்டியில் நடத்த ஊழல்கள் குறித்து சிறப்பு தணிக்கை குழு அமைத்து விசாரிக்கப்படும் ,அதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவற்றை பட்டியலிட்டார்.
இதனைதொடர்ந்து தேர்தல் அறிக்கை வெளியிடபட்ட பின்பு அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது குறித்து கேள்வி எழுப்பபட்டது. அதற்கு பதில் அளித்த அவர்,இரவு 10 மணியிலிருந்து காலை 6 மணி வரை ஒலிபெருக்கி பயன்படுத்தக் கூடாது என்று தான் விதிமுறை உள்ளது.
வேட்பாளர் பொதுமக்களை இரவு 10 மணிக்கு மேல் சந்திக்கக் கூடாது என்று எந்த விதியும் இல்லை.பிரச்சாரம் முடியவே இரவு 12 ஒரு மணி எல்லாம் இருந்திருக்கிறது. சரியான நேரத்தில் செல்ல முடியவில்லை என்றால் மைக்கை அணைத்துவிட்டு கைகுலுக்கி ,வணக்கம் சொல்லிவிட்டு வருவது வழக்கம். அனுமதிக்கப்பட்ட இடங்களில் கடைசி பாய்ண்டுகள் செல்வதற்கு லேட் ஆகி விடுகிறது.
காவல்துறை அனுமதி கொடுத்த இடத்துக்கு தான் சென்றிருக்கிறோம் என தெரிவித்தார். இந்தியா முழுவதும் பிரதமர் மோடி கூட இரவு 10 மணிக்கு மேல் மேடைக்கு சென்று மக்கள் முன்பு , சாஷ்ட்டாங்கமாக மன்னிப்பு கேட்ட வரலாறு எல்லாம் உண்டு என தெரிவித்த அவர் நான் இரவு 10 மணிக்கு மேல் மைக்கில் பேசிய வீடியோவை காவல்துறையை வெளியிட வேண்டியதுதானே? எனவும் தெரிவித்தார்.
திமுககாரர்கள் எப்பவும் கையில் கட்டு போட்டுக்கொண்டு மருத்துவமனையில் போய்படுப்பது வழக்கம்தான். இது ஒன்றும் புதிது கிடையாது.திமுகவிற்கு கோவை மக்களவைத் தொகுதியில் டெபாசிட் கிடைக்காது.கோவை மக்களவைத் தொகுதியில் இவ்வளவு எழுச்சி ஏற்பட்டுள்ளது.
ஆளுங்கட்சியிடம் அனைத்து பவரும் இருக்கிறது.பாஜகவினர் அடித்தார்கள் என்று சொல்வது காதில் பூசுற்றுவதை போன்று இருக்கிறது எனவும் தெரிவித்தார். வன்முறையும் அட்டகாசமும் செய்வதற்கு என்று பிறந்த கட்சி திமுக. அங்கு கைகலப்பு வந்ததற்கு காரணம் திமுகவினர். பாஜக தொண்டர்களை திமுகவினர் தள்ளி இருக்கிறார்கள்.
அதன் பின்னர் திமுகவினரே போய் மருத்துவமனையில் படுத்து கொண்டு கொடுத்திருக்கின்றனர் எனவும்,10 மணிக்கு மேல் அண்ணாமலை பிரச்சாரம் செய்த வீடியோ எங்கே? என கேள்வி எழுப்பிய அவர், நான் எந்த தேர்தல் விதிமுறைகளிலும் ஈடுபடவில்லை என தெரிவித்தார்.
தொடர்ச்சியாக பாஜகவினர் மீது தேர்தல் புகார்கள் வருவது குறித்த கேள்விக்கு, பத்திரிக்கையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் அண்ணாமலை.மேலும் 10 மணிக்கு மேல் நூற்றுக்கும் மேற்பட்டோருடன் ஊர்வலமாக செல்லவில்லை. நூற்றுக்கு மேற்பட்டோர் ஒரு இடத்தில் நின்று கொண்டிருக்கிறார்கள். நான் தமிழ் ஆங்கிலத்தில் பேசுகிறேன். ஜெர்மன் மொழியில் பேச வேண்டுமா என்று பத்திரிக்கையாளருடன் அண்ணாமலை வாக்குவாதம் செய்தார்.
பொதுமக்கள் நான்கு மணி நேரத்துக்கு மேலாக என்னை பார்க்க காத்திருக்கிறார்கள். நான் அவர்களிடம் பேசாமல் எப்படி போக முடியும் என கேள்வி எழுப்பிய அவர் திருப்பூரில் ஜிஎஸ்டி குறித்து கேள்வி எழுப்பிய பெண்ணை பா.ஜ.கவினர் மிரட்டிய வீடியோ வைரலானது குறித்த கேள்விக்கு, அதை நான் பார்க்கவில்லை என அண்ணாமலை பதில் அளித்தார்.
திமுக முதன்முதலாக தமிழகத்தில் டெபாசிட் இழக்க கூடிய தொகுதி கோவை மக்களவைத் தொகுதி. எழுதி வைத்துக் கொள்ளுங்கள் என தெரிவித்த அண்ணாமலை ,வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்த மூன்று அல்லது நான்கு சுற்றுக்களிலேயே தெரிந்து விடும் அவர்கள் டெபாசிட் வாங்க மாட்டார்கள் என்பது. அந்த அளவு வெறுப்பை சம்பாதித்து இருக்கின்றனர் எனவும் தெரிவித்தார்.
10 மணிக்கு மேல் ஏற்கனவே திட்டமிடப்பட்ட பகுதிகளில் ஒலிபெருக்கி இல்லாமல் வணக்கம் சொல்லிவிட்டு வேட்பாளர் போகலாம். இது தமிழகம் முழுவதும் பொருந்தும். அனுமதி பெற்ற இடத்தை தாண்டி வேறு இடத்திற்கு செல்லகூடாது எனவும்,பத்து மணிக்கு மேல் எங்கும் பிரச்சாரம் செய்யவில்லை.
மக்களிடம் மன்னிப்பு தான் கேட்டுக்கொண்டேன் என தெரிவித்தார். பாஜக கலவரத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாக திமுக குற்றச்சாட்டி இருப்பது குறித்து கேள்விக்கு, திமுக தனது தோல்வியை இப்பொழுதே ஒப்புக் கொண்டிருக்கின்றனர் என அண்ணாமலை பதில் அளித்தார்.
ஏப்ரல் 19 வரை அவர்கள் காத்துக் கொண்டிருக்க தயாராக இல்லை எனவும் தெரிவித்தார். திமுக விற்கும் அதிமுகவுக்கும் தான் தேர்தல் போட்டி என சொல்லப்படுவது குறித்த கேள்விக்கு தேர்தல் முடிவுக்கு பின்னர் பார்க்கலாம் என பதில் அளித்தார்.முதல் 15 தேர்தல் வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வாக்குறுதிகளை கடந்த 10 ஆண்டுகளில் செய்ய முடியாமல் போனதற்கு என்ன காரணம் என்ற கேள்விக்கு, மனசாட்சியோடு கேள்வி கேளுங்கள் , வாய் இருக்கின்றது என்று எல்லா கேள்வியும் கேட்க்கூடாது எனவும் நானும் அப்புறம் பேசுவேன் தப்பா போயிடும் என பதில் அளித்தார்.
ஸ்மார்ட் சிட்டி தொடர்பாக இதுவரை சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டதாக தெரியவில்லை என்ற கேள்விக்கு, எழுப்பும் போது எழுப்புவோம் என அண்ணாமலை பதில் அளித்தார்.அப்போது வானதி சீனிவாசன் குறுக்கிட்டு, ஸ்மார்ட் சிட்டி குறித்து சட்டமன்றத்தில் பலமுறை கேள்வி எழுப்பி இருக்கிறேன், Semester என்று கேள்வி கேட்கின்றீர்களா என வானதி பதில் அளித்தார்.
அப்போது ஸ்மார்ட் சிட்டி பணிகள் நடக்காதது குறித்து தான் கேள்வி எழுப்பி இருக்கிறீர்கள் ,ஸ்மார்ட் சிட்டி ஊழல் குறித்து கேள்வி எழுப்பி இருக்கிறீர்களா என கேள்வி எழுப்பபட்டதற்கு, மாநிலத் தலைவர் பதில் சொல்லுவார் என வானதி தெரிவிக்க மீண்டும் அண்ணாமலை பேசினார். அப்போது இன்று எங்களுடைய நிலைப்பாடு சரியாக இருக்கிறது, ஊடகவியலாளர்கள் கேட்கும் கேள்விகளில் அறம் இருக்கின்றதா என்று பார்க்க வேண்டும். அண்ணாமலைக்கு ஒரு நியாயம், திமுகவிற்கு ஒரு நியாயம் என இருக்க கூடாது, அறத்துடன் கேள்வி கேட்க வேண்டும் என பதில் அளித்தார்.
பெட்ரோல், டீசல் விலை கடந்த ஆண்டு குறைந்தது. திமுகவினர் குறைப்பதாக சொன்னார்களே குறைத்தார்களா ? சாப்பிடும் சாப்பாட்டில் உப்பு இருக்க வேண்டும் உங்களுக்கும் ,எனக்கும் என பத்திரிகையாளருடன் வாக்குவாதம செய்த அண்ணாமலை,நியாயமாக கேளுங்கள் என தெரிவித்தார்.கோவையில் திமுக நிர்வாகிகளிடம் கேள்வி எழுப்பினீர்களா என்ற கேள்விக்கு அனைத்து பத்திரிகையாளர்களும் வாக்கு வாதம் செய்யவே சலசலப்பு ஏற்பட்டது.
மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் அனைவரையும் அமைதி படுத்திய நிலையில் ,அக்கா,அக்கா நான் ஹேன்டில் பண்ணிக்கிறேன் என கூறி நிலைமையை சமாளித்தார் அண்ணாமலை. இரண்டு வருடத்தில் எத்தனை முறை பெட்ரோல்,டீசல் விலை குறைத்து இருக்கின்றோம்.கேள்வியில் ஒரு நியாயம் இருக்க வேண்டும் எனவும், பத்திரிகையாளர்கள் நடந்து கொள்ளும் விதத்தை மக்கள் முடிவு செய்யட்டும் எனவும் அண்ணாமலை பதில் அளித்தார்.
பத்திரிகையாளர் என்றாலும் ,அரசியல்வாதி என்றாலும் இரு கொம்பு கிடையாது என வாக்கு வாதம் செய்த அண்ணாமலையிடம், இரு ஆண்டுகளில் எத்தனை முறை பெட்ரோல் குறைத்து இருக்கின்றது என்ற கேள்விக்கு, கூகுள் இருக்கின்றது அதில் பாருங்கள் என அண்ணாமலை பதில் அளித்தார். இரண்டு வருசத்துக்கு முன்னாடி தீபாவளிக்கு பெட்ரோல் ,டீசல் விலையை மத்திய அரசு குறைத்தது என தெரிவித்த அவர், இரண்டு ஆண்டு இல்லை,போன தீபாவளிக்கு பெட்ரோல் ,டீசல் விலையை குறைக்க வில்லையா ? என தெரிவித்தார்.
மத்திய அரசின் பா.ஜ.க தேர்தல் அறிக்கைக்காக காத்திருக்கிறோம். இங்கிருந்து சில தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளது. அது வந்தவுடன் மாநில பாஜக தேர்தல் அறிக கை வெளியிடபடும் எனவும் அண்ணாமலை தெரிவித்தார்.என் மீது வழக்கு போடப்பட்டது குறித்து நான் நீதிமன்றத்திற்கு செல்ல போவதில்லை.
உயர்நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என தெரவித்த அவர்,இரவு 10 மணிக்கு மீது நான் பிரச்சாரம் செய்ததை காவல்துறை தான் நிரூபிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். பாஜகவினர் தொடர்ச்சியாக ஏன் இது போன்று நடந்து கொள்கின்றனர் என்பது குறித்த கேள்விக்கு பத்திரிக்கையாளர் உடன் அண்ணாமலை வாக்கு வாதம் செய்த அவர்,கேள்வி கேட்பதற்கு முன்னரே ஒருதலை பட்சமாக, கேள்வி கேட்டால் அதற்கு பொறுப்பு நானாக இருக்க முடியாது என தெரிவித்தார்.
தோல்வி பயத்தில் வெளி மாநிலத்தில் இருந்து ஆட்களை இறக்கி இருப்பதாக திமுக வேட்பாளர்கள் குற்றம்சாட்டியது குறித்த கேள்விக்கு , நான் அப்படி வெளி மாநில ஆட்களை யாரையும் பார்த்ததில்லை. நீங்கள் யாரையாவது பார்த்திருக்கிறீர்களா? என கேள்வி எழுப்பினர்.
கோவை நகரில் சூயஸ் திட்டம் குறித்து தேர்தல் அறிக்கையில் எதுவும் சொல்லப்படவில்லையே இந்த கேள்விக்கு, நாங்கள் அது குறித்து விரிவாக பேசிக் கொண்டிருக்கிறோம் என அண்ணாமலை பதில் அளித்தார்எங்களைப் பொருத்தவரை தேர்தல் நடத்தப்பட வேண்டும். கோவையில் தங்க சுரங்கத்தையே கொட்டினாலும் பாஜக வெற்றி பெறுவது உறுதி். தேர்தலை நிறுத்துங்கள் என்று நாங்கள் பெட்டிசன் கொடுக்கப் போவதில்லை.
திமுக என்ன செய்தாலும் அதை பாஜக தொண்டன் தாங்குவான் எனவும் தெரிவித்தார்.உள்துறை அமைச்சர் அமித்ஷா நிகழ்வு தமிழ்நாட்டில் மூன்று இடத்தில் இருக்கிறது. சிவகங்கைக்கு வருகிறார்.அங்கு சிறு நிகழ்வில் பங்கேற்கிறார்.
அதன் பின்னர் மதுரை ரோடு ஷோவில் பங்கேற்கிறார். அதன் பின்னர் கன்னியாகுமரி , விருதுநகர் சென்று விட்டு திருவனத்தபுரம் செல்கின்றார்.அமித்ஷா நிகழ்வு இப்பொழுது கோவையில் இல்லை எனவும் அண்ணாமலை பேட்டியன் போது தெரிவித்தார்.