திமுக கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவை சார்பில் திரைப்பட வசனங்கள் ஒப்புவித்தல் போட்டி

திமுக கலை இலக்கிய  பகுத்தறிவுப் பேரவை சார்பில்  திரைப்பட வசனங்கள் ஒப்புவித்தல் போட்டி

வசனங்கள் ஒப்புவித்தல் போட்டி

திமுக கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவை சார்பில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கவிதை, திரைப்பட வசனங்கள் ஒப்புவித்தல் போட்டி நடைபெற்றது.

தர்மபுரி மாவட்டம் 30/11/2023 கருணாநிதி நூற்றாண்டு விழா, திமுக கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவை சார்பில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கவிதை, திரைப்பட வசனங்கள் ஒப்புவித்தல் போட்டி தர்மபுரி மேற்கு மாவட்டம் கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை சார்பில் மொரப்பூரில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகள் கவிதைகள் மற்றும் திரைப்பட வசனங்கள் ஒப்புவித்தல் போட்டிகள் திமுக மேற்கு மாவட்ட செயலாளர் பி.பழனியப்பன் தொடங்கிவைத்தார்.

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தர்மபுரி மேற்கு மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான கவிதைகள் மற்றும் திரைப்பட வசனங்கள் ஒப்புவித்தல் போட்டிகள் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாவட்ட அமைப்பாளர் சி தேசிராஜன் தலைமை வகித்தார்.

மாவட்ட துணை அமைப்பாளர் வரவேற்புரை ஆற்றினார் பேரவையின் மாவட்ட நிர்வாகிகள் பி.அன்பழகன் எஸ்.மணி கருணாநிதி எம்.சி.சின்னராஜ் பி.தம்பிதுரை பாண்டுரங்கன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். சிறப்பு விருந்தினராக தர்மபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் முனைவர் பி.பழனிப்பன் பள்ளி மாணவ மாணவிகளுக்கான கவிதைகள் மற்றும் திரைப்பட வசனங்கள் ஒப்புவித்தல் போட்டிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மேற்கு மாவட்ட அவைத்தலைவர் கே.மனோகரன், மாவட்ட துணை செயலாளர் செ.கிருஷ்ணகுமார்,

கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநில துணை செயலாளர் கே.வி.குப்பம் சி.கோபி தலைமை செயற்குழு உறுப்பினர் கே.சென்னகிருஷ்ணன், ஒன்றிய கழக செயலாளர்கள் இ.டி.டி. செங்கண்ணன், கோ.சந்திரமோகன், வே.சௌந்தரராசு ஐடிவிங் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கு.தமிழழகன், இளைஞரணி துணை அமைப்பாளர் கோட்டிஸ்வரன்,

பேரவை மாவட்ட துணை அமைப்பாளர் எஸ்.அருண் உதயசூரியன், வழக்கறிஞர் கே.ஜி.சரவணன், ஜெயினுலாபுதீன் மதி, பழனி, அண்ணாதுரை, உமாபதி, ரஜினிகாந்த், ராஜசேகர், ஸ்ரீராம், கூட்டுறவு சங்க தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட செயலாளரின் நேர்முக உதவியாளர் சக்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story