களியக்காவிளையில் திமுக பேனர் கிழிப்பு
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பஸ் நிலையம் அருகே தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழாவை வரவேற்கும் விதமாக திமுக சார்பில் ஒரு பேனர் வைக்கப்பட்டு இருந்தது. அதில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின், அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோரின் புகைப்படங்கள் பதிக்கப்பட்டு இருந்தது.
அந்த பேனரை நேற்று நள்ளிரவு யாரோ மர்ம நபர்கள் கத்தியால் கிழித்து சேதப்படுத்தி உள்ளனர். காலையில் பேனர் கழிக்கப்பட்டு இருப்பதை கண்டு திமுகவினர் ஏராளமானோர் அங்கு குவிந்தனர்.
தொடர்ந்து அவர்கள் ஒன்றிய செயலாளர் வக்கீல் ராஜேஷ் குமார் தலைமையில் களியக்காவிளை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஒரு புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவில் பேனரை சேதப்படுத்திய மர்ம ஆசாமிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறினர். இதை அடுத்து திமுகவினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.