தி.மு.க. சார்பில் மாவட்ட செயலர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம் !

தி.மு.க. சார்பில் மாவட்ட செயலர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம் !

தி.மு.க

குமாரபாளையம் தி.மு.க. சார்பில் மாவட்ட செயலர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலர் மதுரா செந்தில் பிறந்த நாளையொட்டி குமாரபாளையம் தி.மு.க. சார்பில் தொகுதி அலுவலகத்தில் மேற்கு மாவட்ட பொருளாளர் ராஜாராம் தலைமையில் பட்டாசுகள் வெடித்தும், கேக் கட் செய்தும் கொண்டாடப்பட்டது. இதில் நகர வடக்கு நகர பொறுப்பாளர்கள், தெற்கு நகர பொறுப்பாளர்கள் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலர் மதுரா செந்தில் பிறந்த நாளையொட்டி பாசம் ஆதரவற்றோர் மையத்தில் உள்ள ஆதரவற்றோர் களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திமுகவின் மாவட்ட பொறுப்பாளர்கள் சார்பு பொறுப்பாளர்கள் மற்றும் நகர பொறுப்பாளர்கள் மாவட்ட மகளிர் அணியினர் என பலரும் கலந்து கொண்டனர்

Tags

Next Story