செஞ்சி அருகே தி.மு.க., திண்ணை பிரசாரம்

செஞ்சி அருகே தி.மு.க., திண்ணை பிரசாரம்

செஞ்சி அருகே நடந்த தி.மு.க., திண்ணை பிரசாரத்தில் ஏராளமான கட்சியினர் பங்கேற்றனர்.  

செஞ்சி அருகே நடந்த தி.மு.க., திண்ணை பிரசாரத்தில் ஏராளமான கட்சியினர் பங்கேற்றனர்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் நரசிங்கராயன்பேட்டை ஊராட்சி எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் இல்லம் தோறும் ஸ்டாலினின் குரல் திண்ணை பிரசாரம் நடந்தது. இதை செஞ்சி ஒன்றியக்குழு தலைவர் விஜயகுமார் தொடங்கி வைத்தார்.

இதில் வீடு, வீடாக சென்று திராவிட மாடல் ஆட்சியின் 33 மாத சாதனைகளும், நிதி நிலை அறிக்கையின் துண்டு பிரசுரங்களும் பொதுமக்களிடம் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை, ஊராட்சி மன்ற தலைவர் பிலால், முன்னாள் ஊராட்சி மன்ற தலை வர்கள் காசிம்மாள் ஏழுமலை, பாலகிருஷ்ணன், துணை தலைவர் ராமு, வார்டு செயலாளர்கள் சிவகுமார், லிங்காநத்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story