திமுக பிரச்சார வாகனம் தேர்தல் களத்தில் இறங்கியது

திமுக பிரச்சார வாகனம் தேர்தல் களத்தில் இறங்கியது

பிரச்சார வாகனம்

நாமக்கல் நகராட்சிக்குட்பட்ட 4வது வார்டு (கம்பளாய்) சின்னமுதலைப்பட்டி அம்மச்சி அம்மன் கோயில் அருகில் திமுக பிரச்சார வாகனம் ஈடுபடுத்தப்பட்டது.

திமுக பிரச்சார வாகனம் குட்டி யானை தேர்தல் களத்தில் இறங்கியது. நாமக்கல் நகராட்சிக்குட்பட்ட 4வது வார்டு (கம்பளாய்) சின்னமுதலைப்பட்டி அம்மச்சி அம்மன் கோயில் அருகில் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் வருகிற நாடாளுமன்ற தேர்தல் பிரச்சார யுக்தியாக,

திமுகவின் சாதனைகளை மக்களுக்கு தெரியப்படுத்த விதமாக "உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்" என்ற பிரச்சார வாகனத்தை நாமக்கல் திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் கே.ஆர்.என். ராஜேஸ்குமார் எம்பி அறிவுறுத்தல்படி TATA ACE (குட்டி யானை) வாகனத்தில் LED திரையில் திமுகவின் சாதனை விளக்க வீடியோக்கள் ஒளிபரப்பப்பட்டது.

இந்த நிகழ்வில் நாமக்கல் நகர கிழக்கு மாவட்ட செயலாளர் செ.பூபதி மற்றும் 4வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் சசிகலா சௌந்தரபாண்டியன் மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் உடன் இருந்தனர்.

Tags

Next Story