கொங்கணாபுரம் ஒன்றியத்தில் திமுக வாக்கு சேகரிப்பு

கொங்கணாபுரம் ஒன்றியத்தில் திமுக வாக்கு சேகரிப்பு

எடப்பாடி சட்டமன்றத் தொகுதி கொங்கணாபுரம் ஒன்றியத்தில் திமுக வேட்பாளர் டி எம் செல்வகணபதி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்


எடப்பாடி சட்டமன்றத் தொகுதி கொங்கணாபுரம் ஒன்றியத்தில் திமுக வேட்பாளர் டி எம் செல்வகணபதி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

சேலம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட எடப்பாடி சட்டமன்ற தொகுதி, கொங்கணாபுரம் ஒன்றியம், மோட்டூர்,கன்னியாம்பட்டி, செங்காடு,அக்கரைப்பட்டி, வெள்ளாளபுரம் மாரியம்மன் கோவில்,வெள்ளாளபுரம் காலனி ஆகிய பகுதிகளில் நேற்று 7.04.24 காலை முதல் இரவு வரை இந்தியா கூட்டணியின் சேலம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் முன்னாள் அமைச்சர்,சேலம் மேற்கு மாவட்ட கழக செயலாளர் டி.எம்.செல்வகணபதி திராவிட மாடல் கழக அரசின் சாதனைகளையும் திட்டங்களையும் எடுத்துக் கூறி உதயசூரியன் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தேர்தல் பிரச்சாரத்தின் போது வெள்ளாளபுரத்தில் பா.ஜ.க முன்னாள் தெற்கு ஒன்றிய செயலாளர் பூபாலன் தன்னை தி.மு.கழகத்தில் இணைத்துக் கொண்டார். நிகழ்வில் சேலம் மேற்கு மாவட்ட கழக துணை செயலாளர் சம்பத்குமார், கொங்கணாபுரம் ஒன்றிய கழக செயலாளர் பரமசிவம்,பொதுக்குழு உறுப்பினர் சௌந்தர்ராஜன், இந்தியா கூட்டணி கட்சிகளின் பொறுப்பாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story