பெரம்பலூரில் திமுக வேட்பாளர் அருண் நேரு வெற்றி
அருண் நேரு
2024 பாராளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி அன்று நடைபெற்ற நிலையில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரம்பலூர், மண்ணச்சநல்லூர், லால்குடி, துறையூர், முசிறி, குளித்தலை ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளிலும், மொத்தம் 11,19,881 வாக்குகள் பதிவாகி இருந்த நிலையில்,
பெரம்பலூர் சுற்றுச்சாலையில் உள்ள ஆதவ் பப்ளிக் பள்ளியில், ஜூன் நான்காம் தேதி இன்று வாக்கு எண்ணும் பணி காலை 8 மணி அளவில்தபால் வாக்குகளும் அதனை தொடர்ந்து எட்டு முப்பது மணி அளவில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள்,
வாக்குப்பதிவு என்னும் பணி நடைபெற்றது இதில் மொத்தம் 24 சுற்றுகள் மின்னணு வாக்குப்பதிவில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் தபால் வாக்குகள் உள்பட திமுக வேட்பாளர் அருண்நேரு 6,03,209 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் 2,14,102 வாக்குகளும். பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் பாரிவேந்தர் 1,61,866 வாக்குகளும், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் தேன்மொழி 1,13,092, வாக்குகளும் பெற்றனர்.
இதில், அதிமுக வேட்பாளர் சந்திரமோகனை விட, திமுக வேட்பாளர் அருண் நேரு 3,89,107 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார், வெற்றி பெற்றதற்கான சான்றிதழை அருண் நேருவிடம் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலகம் மாவட்ட ஆட்சியருமான கற்பகம் வழங்கினார்.