திமுக அரசு செய்த சாதனைகளை கூறி திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு !

திமுக அரசு செய்த சாதனைகளை கூறி திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு !

திமுக 

திமுக அரசு செய்த சாதனைகளை கூறி காஞ்சிபுரம் நாடாளுமன்ற வேட்பாளர் ஜி. செல்வம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

செங்கல்பட்டு மாவட்டம் ஒரத்தூர், மாத்தூர், செண்டிவக்கம், ஊனமலை, அகிலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற வேட்பாளர் ஜி. செல்வம் அவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அவருக்கு பெண்கள் மலர் தூவியும், மாலை அணிவித்தும், மெழுகுவர்த்தி கையில் ஏந்தியவாறு உற்சாக வரவேற்பளித்தனர். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய கழக செயலாளர் தம்பு உள்ளிட்ட இந்திய கூட்டணி கட்சி நிர்வாகிகள் பல கலந்து கொண்டனர்.

காஞ்சிபுரம் நாடாளுமன்ற வேட்பாளர் ஜி. செல்வம் பேசுகையில்,தமிழ்நாடு முதலமைச்சர்கள் பேருந்தில் இலவச பயணம், மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய், கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகளுக்கு ரூபாய் ஆயிரம், ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம், என எண்ணற்ற திட்டங்களை முதலமைச்சர் சிறப்பாக செய்து வருகிறார் என கூறினார்.

Tags

Next Story