புலிக்குப் பிறந்தது பூனையாகுமா? - திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
புலிக்குப் பிறந்தது பூனையாகுமா? என உதயநிதி ஸ்டாலினை குறிப்பிட்டு ஆத்தூரில் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
சேலம் மாவட்டம், அருகே நரசிங்கபுரம் நகராட்சி பகுதியில் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் மலையரசன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வாக்கு சேகரிப்பிற்காக வந்த அவருக்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர் தொடர்ந்து சந்தை திடல் பகுதியில் கூடியிருந்த பொதுமக்களிடம் பேசிய மலையரசன் திமுக ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார். மகளிர் உரிமை தொகை கிடைக்கப்பெறாதவர்கள் தகுதியான நபர்களுக்கு வழங்கப்படும் என ஆத்தூரில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார் புலிக்கு பிறந்தது பூனையாகுமா ? அதுபோல நிச்சயமாகமக்களுக்கான திட்டங்களை பற்றிய சிந்தித்துக் கொண்டிருக்கிறார் அதுபோல் தமிழக முதல்வரும் மக்களுக்கான திட்டத்தை செயல்படுத்தி வருகிறார் என பேசி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதில் சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொருளாளர் ஆத்தூர் ஸ்ரீராம் நரசிங்கபுரம் நகர செயலாளர் வேல்முருகன் கூட்டணி கட்சி நிர்வாகிகள் நரசிங்கபுரம் நகர மன்ற தலைவர் அலெக்சாண்டர் நகர மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்
Next Story