திமுக வேட்பாளர் அறிமுக கூட்டம்: காற்றில் பறக்க விடப்பட்ட விதிமுறைகள்

திமுக வேட்பாளர் அறிமுக கூட்டம்: காற்றில் பறக்க விடப்பட்ட விதிமுறைகள்

திமுக வேட்பாளர் அறிமுக கூட்டம்

ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே நடைபெற்ற திமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் விதிமுறைகள் காற்றில் பறக்க விடப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன்கோவில் பகுதியில் நாடாளுமன்ற தொகுதியின் விருதுநகர்,தென்காசி வேட்பாளர்கள் அறிமுக விழா மற்றும் பொதுக்கூட்டம் விடியா திமுக அரசின் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்ட போது மதுரை டு கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலைகளில் இருபுறமும் தேர்தல் விதிமுறைகளை பின்பற்றாமல் வாகனங்களுக்கு இடையூறாக ஆர்ச்சுகளும் கொடிக்கம்பங்களும் நடப்பட்டிருந்தன.

மேலும் இந்த பொதுக் கூட்டத்திற்கு ஆட்களை திரட்டுவதற்காக லோடு வேன்களிலும் ஆட்டோ களிலும் லாரிகளிலும் காசு கொடுத்து ஆடு மாடுகளை ஏற்றுவது போல் ஆட்களை அள்ளிப் போட்டுக் கொண்டு வந்தனர். இதை பார்த்த காவல்துறையினர் போக்குவரத்து விதிமீறல் அபராதம் விதிக்காமல் வேடிக்கை பார்த்தது பொது மக்களிடையே முகம் சுழிப்பை ஏற்படுத்தியது. மேலும் திமுக கூட்டத்திற்கு பள்ளி குழந்தைகளை அழைத்து வந்தனர். கூட்டத்திற்கு வருகை தந்த கை கூலிகளுக்கு எந்த ஒரு அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை என ஸ்டாலின் பேசிக் கொண்டிருந்தபோது திமுக உபிகளுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு உட்காரும் சேரை தூக்கி போட்டு ரகளையில் ஈடுபட்டனர்.

காவல்துறையினர் அவர்களை சமரசம் செய்தனர். பின்னர் ஸ்டாலின் பேசும்போது இருக்கையை விட்டு எழுந்த பெண்கள், ஆண்கள் வெளியேறி சென்றனர். விடியா அரசின் முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு துண்டு சீட்டில் எழுதி பேசுவது போல் தென்காசி நாடாளுமன்ற திமுக வேட்பாளர் ராணியும் தன்னை பொதுக்கூட்டத்தில் எழுதி வைத்து அறிமுகப்படுத்தியது.

பார்ப்போர் இடையே சிரிப்பழையை ஏற்படுத்தியது. தற்போது நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் பல்வேறு விதிமீறல்கள் நடைபெற்றதால் தேர்தல் ஆணையம் மூலம் வழக்கு பதிவு செய்யப்படுமா என கேள்வி எழும்பியுள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story