தென்காசியில் திமுக வேட்பாளா் அறிமுகக் கூட்டம்

தென்காசியில் திமுக வேட்பாளா் அறிமுகக் கூட்டம்
தென்காசியில் திமுக வேட்பாளா் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது
தென்காசி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் அறிமுக கூட்டம் இலஞ்சியில் நேற்று நடைபெற்றது.

தென்காசி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் அறிமுக கூட்டம் இலஞ்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் தென்காசி, கடையநல்லூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட திமுகவினா் கலந்து கொண்டனா். தென்காசி தெற்கு மாவட்ட திமுக அவைத் தலைவா் சுந்தரமகாலிங்கம் தலைமை வகித்தாா்.

இதில் அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் பேசியதாவது: இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்து கட்சியினரும் கலந்து கொள்ளும் செயல்வீரா்கள் கூட்டம் வரும் 24-ஆம் தேதி மாலை 4 மணிக்கு வேட்பாளா் அறிமுக கூட்டமாக நடைபெறும். தமிழக முதல்வா் ஸ்டாலின் ஸ்ரீவில்லிபுத்தூா் விபிஎம்எம் கல்லூரி அருகில் மாா்ச் 27-ஆம் தேதி தோ்தல் பிரசாரம் செய்கிறாா். தென்காசி மக்களவைத் தொகுதியில் இதுவரை இல்லாத அளவிற்கு திமுக வேட்பாளா் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவாா் என்றாா்.

செங்கோட்டை நகர செயலா் என்.வெங்கடேசன், வேட்பாளா் ராணிஸ்ரீகுமாா் உள்ளிட்டோா் பேசினா். தனுஷ் எம்.குமாா் எம்பி., தலைமை செயற்குழு உறுப்பினா் செல்லத்துரை, ஆறுமுகசாமி, மாவட்ட துணை செயலா்கள் கனிமொழி உள்ளிட்ட ஏராளமான திமுக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்உள்ளிட்ட ஏராளமான திமுக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story