செய்யூரில் திமுக வேட்பாளர் தீவிர பிரச்சாரம்

செய்யூர் சுற்றியுள்ள பகுதிகளில் திமுக வேட்பாளர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முட்டுக்காடு, முதலியார் குப்பம், எல்லையம்மன் கோவில், பனையூர் சின்னகுப்பம், பனையூர்பெரியகுப்பம், கடப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற வேட்பாளர் ஜி. செல்வம் அவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு ஈடுபட்டார். அவருக்கு ஆதரவாக சட்டமன்ற உறுப்பினர்கள் க. சுந்தர், பனையூர் மு. பாபு, பேரூர் செயலாளர் மோகன்தாஸ், பேரூராட்சி மன்ற தலைவர் சம்யுக்தாஅய்யனார் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் மீனவ குப்பங்கள் பகுதியில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கினை சேகரித்தனர். இந்த வாக்கு சேகரிப்பின் போது மீனவ பகுதிகளில் மீன் பிடி துறைமுகம் அமைத்து தரப்படும் எனவும், மீனவர்கள் பகுதியில் உயர் மின்விளக்கு கோபுரங்கள், மீனவர் கூடம், உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும் எனக்கூறி வாக்கினை சேகரித்தனர். அப்பொழுது பெண்கள் அவருக்கு மாலை அணிவித்தும் ஆரத்தி எடுத்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Tags

Next Story