திருத்தணியில் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் தீவிர பரப்புரை
திமுக கூட்டணி சார்பில் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக முன்னாள் மத்திய இணை அமைச்சர் எஸ்.ஜெகத்ரட்சகன் போட்டியிடுகிறார். திருத்தணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அம்மையார் குப்பம் பொதட்டூர்பேட்டை சொரக்காபேட்டையில் அதிக அளவில் நெசவாளர்கள் (முதலியார் சமூகம்) வசித்து வருகின்றனர். அவர்களது வாக்குகளை குறிவைத்து தீவிர தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். திமுக வேட்பாளருக்கு கிராம மக்கள் மலர் தூவி உற்சாகத்துடன் வரவேற்பு அளித்தனர்.
பரப்புரையின் போது பேசிய ஜெகத்ரட்சகன் நெசவாளர், விவசாயிகள் வாழ்வாதாரம் பாதுகாக்க பாடுபடுவேன். விவசாயத்தை ஊக்கிவிக்கும் வகையில் வங்கி கடன் உதவி வழங்க பாடுபடுவேன் என்று உறுதி கூறினார். இதில் திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக, சிபிஎம், சிபிஐ, முஸ்லிம் லீக் உட்பட கூட்டணி கட்சிகள் நிர்வாகிகள் ஆர்வத்துடன் பங்கேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.