தி.மு.க. வேட்பாளர் எஸ்.ஜெகத்ரட்சகன் வாக்கு சேகரிப்பு!

தி.மு.க. வேட்பாளர் எஸ்.ஜெகத்ரட்சகன் வாக்கு சேகரிப்பு!

தி.மு.க. வேட்பாளர் 

அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் எஸ்.ஜெகத்ரட்சகன் நேற்று அரக்கோணம் ஒன்றியத்தில் உள்ள வடமாம்பாக்கம், வாணியம்பேட்டை, இச்சிபுத்தூர், தணிகைபோளூர், கீழாந்தூர், வளர்புரம், பெருங்களத்தூர், கிருஷ்ணாபுரம், மூதூர், கோணலம், ஆனைப்பாக்கம், முள்வாய் உள்ளிட்ட கிராமங்களில் திறந்த வேனில் சென்று பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். அப்போது ஜெகத்ரட்சகனுக்கு கிராம மக்கள் மாலை, சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Tags

Next Story