திமுக வேட்பாளர் செல்வம் வாக்கு சேகரிப்பு


செங்கல்பட்டு மாவட்டம் சின்னகுப்பம், பெரிய குப்பம் பகுதிகளில் திமுக வேட்பாளர் செல்வம் இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
செங்கல்பட்டு மாவட்டம் சின்னகுப்பம், பெரிய குப்பம் பகுதிகளில் திமுக வேட்பாளர் செல்வம் இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த கடலூர் சின்னகுப்பம், பெரிய குப்பம் மற்றும் அதன் சுற்றுப்புற மீனவ பகுதிகளில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செல்வம் இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.... தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 19 ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து பல்வேறு அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், காஞ்சிபுரம் (தனி) மக்களவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் செல்வம் இன்றைய தினம் கல்பாக்கம் அடுத்த கடலூர் சின்னக்குப்பம், பெரிய குப்பம் மற்றும் கூவத்தூர் உள்ளிட்ட சுற்றுப்புறங்களில் உள்ள மீனவ பகுதிகளில் இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட வேட்பாளர் செல்வத்திற்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். மேலூம் மீனவ பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட வேட்பாளர் செல்வத்துக்கு சால்வையுடன் ரோஜா மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது பிரச்சாரத்தின் போது காஞ்சி தெற்கு மாவட்ட செயலாரும், உத்திரமேரூர் எம்எல்ஏ வுமான சுந்தர் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் அப்துல் மாலிக் செய்யூர் எம்எல்ஏ பனையூர் பாபு உள்ளிட்ட இந்தியா மக்கள் கூட்டணி பிரதிநிதிகள் பலர் உடனிருந்தனர்.
Next Story


