அச்சரப்பாக்கம் பகுதியில் திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
செங்கல்பட்டு மாவட்டம்,அச்சரப்பாக்கம் ஒன்றியம் தண்டரைப்பேட்டை, கடம்பூர், கோழியாளம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற வேட்பாளர் ஜி. செல்வம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.அவருக்கு பெண்கள் மலர் தூவியும், மாலை அணிவித்து உற்சாக வரவேற்பளித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய கழக செயலாளர் தம்பு உள்ளிட்ட இந்திய கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். காஞ்சிபுரம் நாடாளுமன்ற வேட்பாளர் ஜி. செல்வம் அவர்கள் பேசுகையில், மகளிருக்கு பேருந்தில் இலவச பயணம்,
மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய், கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகளுக்கு ரூபாய் ஆயிரம், ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம், என எண்ணற்ற திட்டங்களை முதலமைச்சர் சிறப்பாக செய்து வருகிறார் என கூறினார். முன்னதாக கோழியாளம் கிராமத்தில் உள்ள தாத்தா ரெட்டைமலை சீனிவாசன் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.