சின்னசேலம் பகுதியில் திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

சின்னசேலம் பகுதியில் திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

வாக்கு சேகரிப்பு

சின்னசேலம் வடக்கு ஒன்றியம் மற்றும் பேரூராட்சி பகுதியில் தி.மு.க., வேட்பாளர் ஓட்டு சேகரித்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வடக்கு ஒன்றியம் மற்றும் பேரூராட்சி பகுதியில் தி.மு.க., வேட்பாளர் ஓட்டு சேகரித்தார். சின்னசேலம் தி.மு.க., வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏர்வாய்பட்டினம், கடத்துார், தெங்கியாநத்தம், பைத்தந்துறை, எலியத்துார், பாண்டியங்குப்பம், கல்லாநத்தம் உட்பட பல்வேறு கிராமங்களில் வடக்கு மாவட்ட செயலாளர் உதயசூரியன் எம்.எல்.ஏ., தலைமையில் தி.மு.க., வேட்பாளர் மலையரசன் நேற்று ஓட்டு சேகரித்தார். தொடர்ந்து சின்னசேலம் பேரூராட்சி பகுதியிலும் ஓட்டு சேகரித்தார். மாநில மகளிரணி துணை செயலாளர் அங்கையற்கண்ணி, வடக்கு ஒன்றிய செயலாளர் அன்புமணிமாறன், காங்., மாவட்டத் தலைவர் ஜெய்கணேஷ், வி.சி., மாவட்ட செயலாளர் மதியழகன் முன்னிலை வகித்தனர். இதில் வனப்பகுதியில் தார்சாலை அமைத்து கொடுப்பேன், சின்னசேலம் பஸ் நிலையம் விரிவாக்கம், நகரின் சாலை வசதிகள் தொடர்பாக உள்ளிட்ட மக்களின் அடிப்படை பிரசனைகள் தொடர்பாக பல்வேறு வாக்குறுதி அளித்து ஆதரவு கோரினார்.

Tags

Read MoreRead Less
Next Story