செங்கோட்டை ஒன்றியத்தில் திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

X
வாக்கு சேகரிப்பு
செங்கோட்டை ஒன்றியத்தில் திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு.
தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டாக்டர் ராணிஸ்ரீகுமார் செங்கோட்டை ஒன்றிய பகுதிகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வே. ஜெயபாலன் தலைமையில், கோட்டைவாசல் கருப்பசாமி கோவிலில்தரிசனம் செய்து தனது பிரசாரத்தை அவர் தொடங்கினார். தொடர்ந்து, தெற்குமேடு, புதூர், கேசவபுரம், கீழபுதூர், இரவிய தர்மபுரம், பூலாங்குடியிருப்பு, கட்டளைக்குடியிருப்பு, லாலாகுடியிருப்பு, தவணை, வேம்பநல்லூர், கற்குடி, சீவநல்லூர், இலத்தூர், திருவெற்றியூர், அச்சன்புதூர், பார்வதியாபுரம், அனந்தபுரம், அகரக்கட்டு, ஆய்க்குடி, கிளாங்காடு, செம்பூர், பாலமார்த்தாண்டபுரம், சாம்பவர்வடகரை ஆகிய பகுதிகளில் வாக்காளர்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். பிரச்சாரத்தில் கடைய நல்லூர் தொகுதி பார்வையாளர் ஆவின் ஆறுமுகம், மாவட்ட பொருளாளர் எம். ஏ. ஏம். ஷெரீப், ஒன்றிய செயலாளர் ரவிசங்கர், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஆறுமுகசாமி, செல்லத்துரை, சேக்தாவூது, ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பணிக்குழு பொறுப்பா ளர் சீ. பொன் செல்வன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ரமேஷ், தொண்டரணி அமைப்பாளர் இசக்கிபாண்டி யன், செயற்குழு உறுப்பினர் ரகீம், நகர செயலாளர் வெங்கடேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story
