உத்திரமேரூர் ஒன்றிய பகுதிகளில் திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

உத்திரமேரூர் ஒன்றிய பகுதிகளில் திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் 

உத்திரமேரூர் ஒன்றியத்தில் 20க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகளில் வாக்குகள் சேகரிக்கப்பட்டது.

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் செல்வம் உத்திரமேரூர் ஒன்றிய பகுதிகளில் இன்று காலை 8 மணி முதல் பல்வேறு கிராம ஊராட்சிகளில் திறந்த வெளி வாகனத்தில் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் , ஒன்றிய செயலாளர் ஞானசேகர் , பேரூராட்சி தலைவர் சசிகுமார் உடன் இணைந்து வாக்குகள் சேகரித்து வருகிறார்.

பல்வேறு கிராமங்களில் மேற்கொள்ளப்பட்ட சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து மக்களுக்கு எடுத்துரைத்து இனி மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் வாக்குறுதிகள் அளித்து வாக்குகள் சேகரித்து வருகிறார்.

பரப்புரையில் பேசிய உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் , இந்திய இறையாண்மை காக்க இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் எனவும் , விவசாயிகள் நலன் காக்க உத்தரமேரூர் சட்டமன்ற தொகுதியில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு விவசாயிகள் கூடுதல் வருவாய் பெற்றனர்.

இது போன்ற பல திட்டங்களை 30 மாதங்களில் செய்த நிலையில் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றி பெற்றால் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் கூடுதலாக நீட்டிக்கப்படுவதோடு ஊதியமும் உயர்த்தப்படும் என உறுதி அளித்தார். உத்திரமேரூர் ஒன்றியத்தில் 20க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகளில் வாக்குகள் சேகரிக்கப்பட்டது.

Tags

Next Story