குடும்பத்துடன் வாக்களித்த திமுக வேட்பாளர்

தர்மபுரி தொகுதியில் போட்டியிடும் இந்தியா கூட்டணி திமுக வேட்பாளர் மணி சென்னம்பட்டி வாக்குச் சாவடியில் குடும்பத்துடன் வரிசையில் நின்று தனது வாக்கினை செலுத்தினார்.
தமிழகத்தில் 2024 இந்திய நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு துவங்கிய நிலையில், தர்மபுரி பாராளுமன்றத்தில் பாலக்கோடு சட்டமன்ற தொகுதியில் 183 மையங்களில் 272 வாக்கு சாவடிகள் உள்ளது. பொது மக்கள் ஆர்வத்துடன் தங்களது ஜனநாயக கடமையை செலுத்தி வருகின்றனர்.இந்த நிலையில் தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி திமுக வேட்பாளர் வழக்கறிஞர் ஆ.மணி, காரிமங்கலம் அருகேவுள்ள சென்னம்பட்டி முருகர் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு சென்னம்பட்டி வாக்குச் சாவடியில் குடும்பத்துடன் வரிசையில் நின்று தனது வாக்கினை செலுத்தினார்.

Tags

Next Story