தர்மபுரி தொகுதியில் திமுக வேட்பாளர் வெற்றி

தர்மபுரி தொகுதியில் திமுக வேட்பாளர் வெற்றி

தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் பாமக மற்றும் திமுக இழுபறி நீடித்து நிலையில் இறுதியில் திமுக வேட்பாளர் மணி வெற்றி பெற்றுள்ளார்.

தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் பாமக மற்றும் திமுக இழுபறி நீடித்து நிலையில் இறுதியில் திமுக வேட்பாளர் மணி வெற்றி பெற்றுள்ளார்.
தமிழகத்தில் முதல் மற்றும் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது அதனை முன்னிட்டு இன்று இந்தியா முழுவதும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் சூழலில், தர்மபுரி செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை இன்று ஜூன் 4 நடைபெற்று வருகிறது. மாலை இறுதி கட்ட வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வந்த சூழலில் காலை முதல் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் சௌமியா அன்புமணி மற்றும் திமுக வேட்பாளர் ஆ.மணி ஆகிய இருவருக்கும் கடும் போட்டி நிலவியது இந்த நிலையில் பனிரெண்டாவது சுற்றில் இருந்து திமுக வேட்பாளர் முன்னிலை வகித்து வந்த நிலையில் இறுதியில் 21 ஆயிரத்து 750 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் மணி வெற்றி பெற்றுள்ளார்.

Tags

Next Story