எடப்பாடியில் திமுக வேட்பாளர் இறுதி கட்ட பிரச்சாரம்

எடப்பாடியில் திமுக வேட்பாளர் இறுதி  கட்ட பிரச்சாரம்

சேலம் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி இறுதி கட்ட பிரச்சாரத்தை எடப்பாடி பஸ் நிலையத்தில் மேற்கொண்டார்.


சேலம் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி இறுதி கட்ட பிரச்சாரத்தை எடப்பாடி பஸ் நிலையத்தில் மேற்கொண்டார்.

சேலம் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி இறுதி கட்ட பிரச்சாரத்தை எடப்பாடி பஸ் நிலையத்தில் மேற்கொண்டார். தமிழகத்தில் 2024 நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் புதன்கிழமை இன்று ஆறு மணியுடன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் சேலம் நாடாளுமன்ற தொகுதியின் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் TM. செல்வகணபதி எடப்பாடி சட்டமன்ற தொகுதி எடப்பாடி பஸ் நிலையத்தில் திறந்த பிரச்சார வாகனத்தில் பொதுமக்களிடையே உதய சூரியன் சின்னத்திற்க்கு ஆதரவு கேட்டு இறுதி கட்ட பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது என்னை வெற்றி பெறச் செய்தால் உங்களுக்கு உண்மையாகவும் நன்றியுடன் இருப்பேன் என்று கூறி உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார். அப்போது எடப்பாடி நகர மன்ற தலைவர் டி எஸ் எம் பாஷா, கொங்கணாபுரம் ஒன்றிய செயலாளர் பரமசிவம், எடப்பாடி ஒன்றிய செயலாளர் நல்லதம்பி, முன்னாள் எம்எல்ஏ ஐ கணேசன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பல உடன் இருந்தனர்.

Tags

Next Story