கெங்கவல்லியில் வைக்கப்பட்ட திமுக மாநாடு பேனர் கிழிப்பு
கெங்கவல்லியில் வைக்கப்பட்ட திமுக மாநாடு பேனர் கிழிக்கப்பட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் கெங்கவல்லி கெங்கவல்லியில் திமுக இளைஞரணி மாநாட்டிற்காக வைக்கப்பட்ட பேனரை மர்ம நபர்கள் கிழித்தது குறித்து காவல்துறையினரிடம் புகார் தரப்பட்டுள்ளது.கெங்கவல்லி நகர திமுக செயலாளராக இருப்பவர் பாலமுருகன்.
இவரும், கட்சி நிர்வாகிகளும் சேர்ந்து வரும் 21ஆம் தேதி நடைபெற உள்ள திமுக மாநில இளைஞரணி 2ஆவது மாநாடு தொடர்பான வரவேற்பு பேனர் ஒன்றை. கெங்கவல்லி சிவன் கோயில் அருகே வைத்திருந்தனர். இந்நிலையில் மாமநபர்கள் வியாழக்கிழமை அதிகாலை அதனை இரண்டாக கிழித்துவிட்டுச் சென்றுவிட்டனர்.
பேனரை கிழித்த மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, திமுக நகர செயலாளர் சு.பாலமுருகன் கெங்கவல்லி போலீஸில் புகார் அளித்தார். போலீஸார் இது தொடர்பாக வழக்குப்பதிந்து பேனரை கிழித்த நபர்களைத் தேடி வருகின்றனர்.
Next Story