குறிஞ்சிப்பாடியில் திமுக ஆலோசனை கூட்டம்

குறிஞ்சிப்பாடியில் திமுக ஆலோசனை கூட்டம்

திமுக ஆலோசனை கூட்டம் 

குறிஞ்சிப்பாடியில் திமுக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

திராவிட முன்னேற்றக் கழக இளைஞர் அணி செயலாளர் மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் வரும் டிசம்பர் 24 ஆம் தேதி சேலத்தில் நடைபெற உள்ள தி.மு.க 2 வது இளைஞரணி மாநில மாநாட்டில் பங்கேற்க உள்ள இளைஞரணிக்கான ஆலோசனைக் கூட்டம் குறிஞ்சிப்பாடி திராவிட முன்னேற்றக் கழக ஒன்றிய செயலாளர் சிவக்குமார் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாநாட்டில் பங்கேற்கவுள்ள இளைஞரணியின் பட்டியல், மற்றும் இளைஞர் அணி சீருடை வழங்குதல் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. இந்த கூட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழக ஒன்றிய,நகர, பேரூர், ஊராட்சி, கிளை, கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story