விளவங்கோடு சட்டமன்ற தொகுதி திமுக ஆலோசனை கூட்டம்

X
குமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்றத்தொகுதி தி.மு.க. தகவல் தொழில் நுட்ப அணி சார்பில் நீட் கையெழுத்து இயக்கம் குறித்த ஆலோசனை கூட்டம் குழித்துறை நகர தி.மு.க. அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர்கள் ஆஸ்பின், கிருபா ஆகியோர் தலைமை தாங்கினார். தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள் ஆல்பின் கான், ரூபின் தியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் மேல்புறம் தெற்கு ஒன்றிய செயலாளர் ராஜேஷ்குமார், குழித்துறை நகர செயலாளர் வினுக்குமார், குமரி மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் சிவபாலன் உட்பட பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி சார்பில் ஐம்பதாயிரம் நீட் விலக்கு கையெழுத்துகள் பெறவேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.
Tags
Next Story
