நாகையில் திமுக ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம்
கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்
நாகை மாவட்டம் நகர திமுக நிர்வாகிகள் | பூத கமிட்டி உறுப்பினர்கள், பூத் ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டத்திற்கு நகர அவைத்தலை வர் முருகையன் தலைமை வகித்தார். நகர செயலாளர் மாரிமுத்து வரவேற்றார்.
இதை தொடர்ந்து இல்லங்கள் தோறும் சென்று திமுகவின் சாதனை அடங்கிய துண்டு பிரசுரங்களை ஒட்டினர். அப்போது தமிழ்நாடு மீன்வ ளர்ச்சி கழக தலைவர் கவுதமன் பேசியதாவது: திராவிட மாடல் ஆட்சியில் 1.15 கோடி குடும்ப தலைவி களுக்கு மாதந்தோறும் ரூ.1000 கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டுள்ளது. 1கோடிக்கு அதிகமானவர் களுக்கு மக்களைத்தேடி மருத்துவம் வழங்கப்பட்டுள்ளது. மீன்பிடி தடைக்காலம் நிவாரணம் உயர்த்தி வழங்கப் பட்டுள்ளது.
உழவர் நல மேம்பாட்டிற்காக தனி நிதி நிலை அறிக்கை என எண்ணற்ற திட்டங்களை முதல்வர் வழங்கியுள்ளார். இந்த சாதனைகளை எடுத்து கூறி வரும் பாராளுமன்ற தேர்தலில் வாக்குகள் கேட்க வேண்டும். வரும் நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெற வேண்டும். திமுக மட்டுமே சாதனைகளை சொல்லி வாக்குகள் கேட்கும் முழு தகுதியை பெற்றுள்ளது. பாஜகவிற்கு 2 சதவீத வாக் குகள் கூட இல்லை. அதிமுக பாஜகவுடன் கூட்டணி இல்லை என கூறுகிறது. ஆனால் அதிமுக மறைமுகமாக கூட்டணி வைத்து செயல்படுகிறது. சிறுபான்மை இன மக்களை ஒழிக்க பாசிச மோடி அரசு துடித்து வருகிறது.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 இடங்களையும் திமுக கூட்டணி வெற்றி பெற தொண்டர்கள் ஓயாமல் உழைக்க இவ்வாறு அவர் கூறினார். வேண்டும். இவ்வாறு கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் லோகநாதன், கவுன்சிலர் அண்ணாதுரை, மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் குலோத்துங்கன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.