பாஜகவின் வளர்ச்சியை திமுகவால் பொறுக்க முடியவில்லை:செந்தில் நாதன்

பாஜகவின் வளர்ச்சியை திமுகவால் பொறுக்க முடியவில்லை:செந்தில் நாதன்

செய்தியாளர்களை சந்தித்த செந்தில் நாதன் 

பாஜகவின் வளர்ச்சியை திமுகவால் பொறுக்க முடியவில்லை என செந்தில் நாதன் குற்றச்சாட்டியுள்ளார்.

கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரவி. பாஜக மாவட்ட பட்டியல் அணி நிர்வாகி. அவரது சொந்த ஊரான வேட்டையார் பாளையத்தில் அதே சமூகத்தை சேர்ந்த சக்திவேல் என்பவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில், சின்னதாராபுரம் காவல் நிலையத்தில் சக்திவேல் புகார் அளித்தார். இந்த புகார் அடிப்படையில் ரவி கைது செய்யப்பட்டு, நான்கு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனை கண்டித்து அவரது ஊர் பொதுமக்கள் மற்றும் பாஜக மாவட்ட தலைவர் செந்தில் தலைமையில் கரூர் - தாராபுரம் தேசிய நெடுஞ்சாலையில் பாஜக கரூர் மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமையில் நேற்று இரவு மறியல் போராட்டத்தில ஈடுபட்டனர். போராட்டத்தின் போது, பாஜக நிர்வாகி மீது போடப்பட்ட பொய் வழக்கை திரும்ப பெற வேண்டும்.

உண்மையான குற்றவாளி மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். என்று கூறி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த போராட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு ஏற்ப்பட்டது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட தலைவர் செந்தில்நாதன், பட்டியல் இன மக்களின் பாதுகாப்பை காவல்துறையின் உறுதி செய்ய வேண்டும்.

அவ்வாறு காவல்துறை உறுதி செய்யாவிட்டால், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஒப்புதல் பெற்று, கரூர் மாவட்டம் முழுவதும் மறியல் போராட்டம் நடைபெறும் என்றார். மேலும், மாவட்டத்தில் சட்ட விரோதமாக இயங்கும் மதுபான கடைகளை மூட வேண்டும். கள்ளு கடை விற்பனையை தடை செய்ய வேண்டும் என்று கூறினார்.

மேலும் பாஜகவின் வளர்ச்சியை திமுகவால் பொறுத்துக் கொள்ள இயலவில்லை. அண்ணாமலையின் சொந்த ஊரில் பாஜக வளர்ந்து வருவதை பொறுத்துக் கொள்ள முடியாமல் பொய்யான வழக்குகளை போடுகிறார்கள் என தெரிவித்தார்.

Tags

Next Story