திமுக கவுன்சிலர் பதவி ராஜினாமா

திமுக கவுன்சிலர்  பதவி ராஜினாமா

 பழனி அருகே திமுக கவுன்சிலர் ஒருவர் தனது அனைத்து பதவிகளையும் ராஜினாமா செய்துள்ளார். 

பழனி அருகே திமுக கவுன்சிலர் ஒருவர் தனது அனைத்து பதவிகளையும் ராஜினாமா செய்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் திமுக கவுன்சிலர் ஒருவர் தனது அனைத்து பதவிகளையும் ராஜினாமா செய்துள்ளார். பழனி சிவகிரிப்பட்டி ஊராட்சி திமுக கவுன்சிலர் ராஜவேல் திமுக சார்பாக வகித்து வந்த அனைத்து கட்சி பதவிகளையும் ராஜினாமா செய்தார். வேலைப்பளு காரணமாக சிவகிரிப்பட்டி ஊராட்சி திமுக துணை செயலாளர் பதவி மற்றும் திண்டுக்கல் மேற்கு மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ஆகிய பதவிகளை ராஜினாமா செய்து, திமுகவின் அடிப்படை உறுப்பினராக மட்டும் தொடர்வதாக அறிவிப்பு. வேலைப்பளு காரணமாக கட்சி பணிகளை மேற்கொள்ள முடியவில்லை என்பதால் மாவட்ட செயலாளர் ஜ.பி. செந்தில்குமார் முன்னிலையில் ராஜினாமா செய்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

Tags

Next Story