தி.மு.க., கவுன்சிலர் பேனர் கிழிக்கப்பட்டதால் சாலை மறியல்

தி.மு.க., கவுன்சிலர் பேனர் கிழிக்கப்பட்டதால் சாலை மறியல்

கிழிக்கப்பட்ட பேனர்

தி.மு.க., கவுன்சிலர் பேனர் கிழிக்கப்பட்டதால் சாலை மறியல் நடைபெற்றது.
திண்டுக்கல் - பழநி ரோட்டில் உள்ள செல்லாண்டியம்மன் கோயிலில் அக்.27ல் கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி பல்வேறு அரசியல் கட்சியினர் விழாவுக்கு வரும் பக்தர்களை வரவேற்கும் விதமாக கோயில் அருகே பேனர்களை வைத்தனர். மாநகராட்சி 10-வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் பானுப்பிரியா சார்பில் வைக்கப்பட்ட பேனரும் இருந்தநிலையில் நேற்று காலை அந்த பேனர் கிழிக்கப்பட்டிருந்தது. இதையறிந்த அவரது ஆதரவாளர்கள் ஆத்திரமடைந்து பழநி ரோட்டில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த மேற்கு போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுதொடர்பாக புகார் அளியுங்கள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மறியலை கைவிட்டு கலைந்தனர். இதனால் திண்டுக்கல் -பழநி ரோட்டில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags

Next Story