திமுக கவுன்சிலர் தந்தை கொலை - மேலும் ஒருவர் கைது
பைல் படம்
திண்டுக்கல் மாநகராட்சி திமுக கவுன்சிலரின் தந்தை கொல்லப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த மற்றொரு குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாநகராட்சி 25 வது வார்டு திமுக கவுன்சிலர் சிவாவின் தந்தை நாகராஜன் கடந்த பிப்ரவரி மாதம் மக்கான் பள்ளிவாசல் அருகே டூவீலர் சென்றபோது மிளகாய் பொடி தூவி ஓட ஓட விரட்டி மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் திண்டுக்கல் நகர் தெற்கு காவல் துறையினர் 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் தொடர்புடைய தலைமறைவாக இருந்த குடைபாறைப்பட்டியை சேர்ந்த மாரியப்பனை இன்று கைது செய்தனர்.
Tags
Next Story