நகர்மன்ற தலைவரை எதிர்த்து திமுக கவுன்சிலர்கள் போராட்டம்

நகர்மன்ற தலைவரை எதிர்த்து திமுக கவுன்சிலர்கள் போராட்டம்

 சீர்காழி நகராட்சி கூட்டத்தில் திமுக நகர்மன்ற தலைவரைக் கண்டித்து, அதேக் கட்சி உறுப்பினர்கள் வாயில் கருப்பு துணி கட்டிக் கொண்டு வெளிநடப்பு செய்தனர்.

சீர்காழி நகராட்சி கூட்டத்தில் திமுக நகர்மன்ற தலைவரைக் கண்டித்து, அதேக் கட்சி உறுப்பினர்கள் வாயில் கருப்பு துணி கட்டிக் கொண்டு வெளிநடப்பு செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சியில் நகர மன்ற சாதாரண கூட்டம் கூட்ட அரங்கில் நகர் மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி தலைமையில் நடைபெற்றது.

திமுக, அதிமுக, பாமக , சுயேச்சை உள்ளிட்ட நகர மன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்று தங்கள் பகுதியில் தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கோரிக்கைகளை நகர மன்ற தலைவரிடம் வைத்தனர். இந்நிலையில் நகர் மன்ற தலைவர் ஒரு தலை பட்சமாக செயல்படுவதாக கூறி திமுக நகர் மன்ற உறுப்பினர் 16வது வார்டு வள்ளி, 17 வது வார்டு ரம்யா, 23 வது வார்டு ரேணுகாதேவி ஆகிய திமுக நகர மன்ற உறுப்பினர்கள் நகர மன்ற கூட்ட அரங்கில் வாயில் கருப்பு துணி கட்டிக் கொண்டு தங்கள் வாழும் பகுதிகளுக்கு தேவையான சாலை, குடிநீர், மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏதும் கடந்த இரண்டு வருடங்களாக செய்து தரவில்லை எனக் கூறி வாயில் கருப்பு துணி கட்டிக் கொண்டு நகர மன்ற கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

இதனால் பரபரப்பு ஏற்பட்டது தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் உறுப்பினர்களுக்கு ஒரு தலைப்பட்சமாக செயல்படுவதாக வெளிநடப்பு செய்த திமுக நகரமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தார்கள்

Tags

Next Story