பகுதிநேர நியாய விலைக் கடை அமைக்க திமுக கோரிக்கை

பகுதிநேர நியாய விலைக் கடை அமைக்க திமுக கோரிக்கை
 கடையத்தில் பகுதிநேர நியாய விலைக் கடை அமைக்க திமுக.,வினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடையத்தில் பகுதிநேர நியாய விலைக் கடை அமைக்க திமுக.,வினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியப் பகுதியில் பகுதி நேர நியாயவிலைக் கடை அமைக்க வேண்டும் என திமுக சாா்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. தமிழக உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல்துறை அமைச்சா் சக்கரபாணியிடம் தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் ஜெயபாலன் அளித்த மனு.கடையம் ஒன்றியத்திற்குட்பட்ட ராஜாங்கபுரம்,வாகைக்குளம்,பாப்பான்குளம்,பெரியத்தெரு,ரவணசமுத்திரம் ஆகிய ஊா்களில் அதிக எண்ணிக்கையிலான குடும்பஅட்டை தாரா்கள் ஒரே கடையில் பொருட்களை வாங்க வேண்டியதுள்ளது.மேலும் மக்கள் நீண்டதூரம் சென்று பொருட்களை வாங்க வேண்டிய நிலை உள்ளது. எனவே பகுதி நேர நியாயவிலைக் கடை சிறப்புத்திட்டத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story