தி.மு.க. கொடி கம்பம் இடிப்பு - காவல்துறையினர் விசாரணை
காவல் நிலையம்
பொம்மிடி அருகே தி.மு.க. கொடி கம்பத்தின் பீடம் உடைக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பையர்நத்தம் ஊராட்சி கதிரிபுரத்தில் தி.மு.க. கொடி கம்பம் இருந்தது. அந்த கம்பத்தின் பீடம் உடைக்கப்பட்டது. இது தொடர்பாக தி.மு.க. கிளை செயலாளர் முருகன், பொம்மிடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.விசாரணையில், வாக்குச்சாவடி மையத்தில் பா.ம.க.வை சேர்ந்த சிலருக்கும், தி.மு.க. கிளை செயலாளர் முருகனுக்கும் தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதைதொடர்ந்து தி.மு.க.கொடிக்கம்பம் பீடம் உடைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக பொம்மிடி காவல்துறையினர் மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story