குமாரபாளையத்தில் திமுக மாவட்ட செயலாளர் வாக்குகள் சேகரிப்பு
திமுக மாவட்ட செயலாளர் வாக்கு சேகரிப்பு
குமாரபாளையத்தில் திமுக வேட்பாளர் உடன் மாவட்ட செயலாளர் வாக்கு சேகரித்தார்.
நாமக்கல் நாடாளுமன்ற திமுக வேட்பாளர் V.S.மாதேஸ்வரன் எலச்சிப்பாளையம் பகுதி மண்டகப்பாளையம், குமாரமங்கலம், சாலப் பாளையம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திராவிட மாடல் அரசின் நலத்திட்டங்களை எடுத்து கூறி வாக்குகள் சேகரித்தார்.அவருடன் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக கழக செயலாளர் .எஸ்.எம்.மதுரா செந்தில் அவர்கள் வாக்குகள் சேகரித்தார்.
இந்நிகழ்வில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளரும் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினருமான E.R.ஈஸ்வரன் மற்றும் எலச்சிப்பாளையம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் செல்வராஜ் உள்ளிட்ட கழக நிர்வாகிகளும், கூட்டணி கட்சியினரும் பங்கேற்று வாக்கு சேகரித்தனர்.
Next Story