சிவகாசியில் இல்லம் தோறும் ஸ்டாலின் குரல் பிரச்சாரம் துவக்கம்
சிவகாசி மாநகர திமுக சார்பாக "இல்லம் தோறும் ஸ்டாலின் குரல்" பிரச்சாரம் துவங்கியது.
விருதுநகர் மாவட்டம், இல்லம்தோறும் ஸ்டாலினின் குரல்" என்ற தலைப்பில் சிவகாசி மாநகர திமுக சார்பாக திண்ணை பிரசாரம் நேற்று மாலை தொடங்கியது: மாநகர செயலாளர் எஸ். ஏ. உதயசூரியன் தலைமையில் திமுகவினர் வீடுவீடாக சென்று துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்தனர்.'இல்லம்தோறும் ஸ்டாலினின் குரல்' என்ற தலைப்பில் திண்ணை பிரசாரத்தை திமுகவினருக்கு தொடங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தவிட்டிருந்தார்.
அதன்படி தமிழகம் முழுவதிலும் திமுகவினர் திண்ணை பிரச்சாரத்தை தொடங்கினர். சிவகாசி மாநகர திமுக சார்பாக மாநகராட்சியில் உள்ள 48 வட்டக் கழகத்திலும் திண்ணைப் பிரச்சாரம் நேற்று மாலை தொடங்கியது. திண்ணைப் பிரச்சாரத்தை சிவகாசி மாநகர திமுக செயலாளர் எஸ்.ஏ. உதயசூரியன் தொடங்கி வைத்தார். ஒவ்வொரு பகுதி கழகத்திலும் பகுதி கழக செயலாளர்கள் அ. செல்வம்,, காளி ராஜன், மாரீஸ்வரன், கருணாநிதி பாண்டியன், முத்தலிப் மற்றும் மாநகராட்சி திமுக கவுன்சிலர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள் , வட்டக் கழக நிர்வாகிகள் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரம் வழங்கினர்.
அப்போது ஒவ்வொரு வீடுகளிலும் துண்டறிக்கைகளை வழங்கி, 'இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்' என்ற பரப்புரை குறித்து விளக்கினர். மேலும் திராவிட மாடல் ஆட்சியின் மூன்றாண்டு சாதனைகள், தமிழ்நாடு அரசின் 2024-25க்கான பட்ஜெட் சிறப்பம்சம் குறித்தும் விளக்கினர். மேலும் ஒன்றிய பாஜ அரசு தமிழ்நாட்டுக்கும் தமிழுக்கும் தமிழர்களுக்கும் செய்து வரும் அநீதிகளையும் எடுத்துரைத்தனர்.