ஜக்கம்மா சொல்றா, ஜக்கம்மா சொல்றா வாக்கு சேகரித்த திமுக நிர்வாகிகள்.
பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி திமுக மற்றும் தோழமைக் கட்சிகளின் சார்பில் திமுக வேட்பாளர் அருண்நேரு போட்டியிடுகிறார்.பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்து வருகிறார். இந்நிலையில் முசிறி ஒன்றியத்திற்குட்பட்ட புலிவலம் ஊராட்சியில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அருண்நேருவை ஆதரித்து ஜக்கம்மா சொல்ற ஜக்கம்மா சொல்ற குடுகுடுப்பை அடித்து திமுக நிர்வாகிகள் வாக்கு சேகரித்தனர் .
அப்போது குடுகுடுப்பைக்காரர் பேசியதாவது, முதல்வர் ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியின் படி மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கி வருகிறார். கல்லூரி மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கி வருகிறார்.100 நாள் வேலைத்திட்டத்தை 150 நாளாக மாற்றி தருவேன் எனவும் 294 ஊதியத்தை 400 ரூபாயாக உயர்த்தி தருவேன் என கூறி நல்ல காலம் பொறக்குது நல்ல காலம் பொறக்குது ஜக்கம்மா சொல்ற ஜக்கம்மா சொல்ற என குடுகுடுப்பை அடித்து திமுக நிர்வாகிகள் வாக்கு சேகரித்தனர்.