திமுக தேர்தல் அலுவலகம் திறப்பு: வனத்துறை அமைச்சர் திறப்பு !
திமுக
வெண்ணந்துர் - பகுதியில் திமுக தேர்தல் அலுவலகம் திறப்பு: வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் திறந்து வைத்தார்.
நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் பகுதிகளில் கூட்டணி கட்சிகள் சார்பில் தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் தமிழக வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் அலுவலகத்தை திறந்து வைத்துப் பேசினார். இதில் பேசிய அவர், இந்தியா கூட்டணியை வாக்காளர்கள் வெற்றி பெறச்செய்ய வேண்டிய அவசியம் என்ன என்பது குறித்துப் பேசினார். இதில் ஒன்றியக் குழு உறுப்பினர் ஒன்றிய கழகச் செயலாளர் ஆர். எம் .துரைசாமி, நாமக்கல் மாவட்ட திமுக பொருளாளரும், தொகுதி தேர்தல் பொறுப்பாளருமான ஏ.கே. பாலசந்தர், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஏ.ஆர்.துரைசாமி, தகவல் தொழில்நுட்ப பிரிவு ரவீந்திரன், உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கொங்கு நாடு தேசிய கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Next Story