திமுக தேர்தல் பணிமனை திறப்பு விழா
பாரதிபுரத்தில் இந்தியா கூட்டணி தருமபுரி நாடாளுமன்ற தொகுதி திமுக பணிமனை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.
தருமபுரி நகராட்சிக்குட்பட்ட பாரதிபுரம் மதுபாய் திருமண மண்டபம் எதிரில் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் MRK.பன்னீர்செல்வம்தருமபுரி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பணிமனையை திறந்துவைத்தார். ஒருங்கிணைந்த தருமபுரி மாவட்ட திமுக கழக செயலாளர்கள் முனைவர் பி.பழனியப்பன் M.Sc, Phd, தடங்கம் பி.சுப்பிரமணி Ex.MLA,தருமபுரி நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் வழக்கறிஞர் ஆ.மணிஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்தியா கூட்டணி மாவட்ட தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள், தோழமை கட்சி நிர்வாகிகள் திமுக மாநில, மாவட்ட, ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பு தலைவர்கள், சார்பு அணி நிர்வாகிகள்,முன்னாள் திமுக நிர்வாகிகள் அனைவரும் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.
Next Story